ADDED : மார் 06, 2026 03:43 AM

அ நிறம் | அளவு
கடலுார்: கடலுார் ஜவான்ஸ் பவன் அருகில், இந்திய கம்யூ.,கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் நடத்தும் போரை மத்திய அரசு கண்டித்திட வலியுறுத்தி இந்திய கம்யூ., கடலுார் வட்டக்குழு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட செயலாளர் துரை கண்டன உரையாற்றினார். மாவட்ட பொருளாளர் பாஸ்கர், குளோப், பன்னீர்செல்வம், மாநகர செயலாளர் நாகராஜ், குறிஞ்சிப்பாடி ஒன்றிய செயலாளர் மகேஷ்பிரபு மற்றும் இந்திய கம்யூ., நிர்வாகிகள் மற்றும் ஜீவா சாலையோர வியாபாரிகள் சங்கத்தினர் பங்கேற்று கண்டன கோஷங்களை எழுப்பினர்.
