/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
இந்திய கம்யூ., ஆர்ப்பாட்டம் கடலுார்
/
இந்திய கம்யூ., ஆர்ப்பாட்டம் கடலுார்
ADDED : ஏப் 10, 2025 01:41 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார்: கடலுாரில் இந்திய கம்யூ., சார்பில், வக்ப் வாரிய சட்ட திருத்த மசோதாவை திரும்ப பெற வலியுறுத்தி, பழைய கலெக்டர் அலுவலகம் முன் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் துரை தலைமை தாங்கினார்.
மாநகர செயலாளர் நாகராஜ், விவசாய தொழிலாளர் சங்கம் மாவட்டக்குழு கிருஷ்ணமூர்த்தி, நிர்வாகிகள் அரிகிருஷ்ணன், முருகன், பாலு, செல்வம், வடிவேலு முன்னிலை வகித்தனர்.
மாவட்ட துணைசெயலாளர் குளோப், மாவட்ட நிர்வாகக்குழு குணசேகரன், சிவக்குமார் கண்டன உரையாற்றினர். வக்ப் வாரிய சட்ட திருத்த மசோதாவை கண்டித்தும், திரும்ப பெறக்கோரியும் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.