UPDATED : அக் 06, 2026 12:00 AM
ADDED : அக் 05, 2026 04:22 PM
கடலுார்: கடலுார் கலெக்டர் அலுவலகத்தில் இந்திய மாணவர் சங்கத்தினர் போராட்டம் நடத்த முயன்றதால் பரபரப்பு நிலவியது.
இந்திய மாணவர் சங்க மாவட்ட தலைவர் பூபதி தலைமையில், மாவட்ட செயலாளர் சவுமியா, மாநில குழு உறுப்பினர் ஜீவானந்தம், இணை செயலாளர்கள் சிவநந்தினி, சிவன்ராஜ் மற்றும் 20க்கும் மேற்பட்டோர் நேற்று கலெக்டர் அலுவலக நுழைவு வாயில் முன் போராட்டம் நடத்த முயன்றனர்.
அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி விசாரித்தனர். அதில், கடலுார் அரசு கல்லுாரியில் கவுரவ விரிவுரையாளரால் பாலியல் ரீதியாக பாதிக்கப்பட்ட மாணவி கல்லுாரி முதல்வரிடம் புகார் அளித்தார். அதன் மீது கல்லுாரி உட்புகார் விசாரணை குழு 10 நாட்கள் கழித்து விசாத்தபோது, மாணவியிடம் மிரட்டும் வகையில் பேசியுள்ளனர்.
மாணவியை மிரட்டிய உட்புகார் குழுவினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டி போராட்டம் நடத்த முயன்றது தெரிந்தது.
அவர்களை போலீசார் சமாதானம் செய்ததை தொடர்ந்து, கலெக்டரை சந்தித்து மனு அளித்து விட்டு கலைந்து சென்றனர்.
