ADDED : நவ 20, 2024 06:47 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார் : கடலுார் மத்திய மாவட்ட காங்., சார்பில் மறைந்த முன்னாள் பிரதமர் இந்திரா பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.
கடலுார் மாநகராட்சி கவுன்சிலர் சரஸ்வதி வேலுச்சாமி தலைமை தாங்கினார். மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் குமார், ரவிக்குமார், மாவட்ட பொருளாளர் ரமேஷ், மாவட்ட பொதுச்செயலாளர்கள் கிஷோர், காமராஜ், வட்டார தலைவர்கள் ராஜா, ராஜேஷ் முன்னிலை வகித்தனர்.
கடலுார் மத்திய மாவட்ட தலைவர் திலகர், மஞ்சக்குப்பம் காமராஜர் சிலை முன்பு இந்திரா படத்திற்கு மாலை அணிவித்து, நிர்வாகிகளுக்கு இனிப்பு வழங்கினார்.
மாவட்ட செயலாளர்கள் சாந்தி, ராஜ்குமார், மணிகண்டன், சங்கர், மணி, எஸ்.சி.,எஸ்.டி.,பிரிவு தலைவர் மோகன், மகிளா காங்., மகாலட்சுமி மற்றும் நகர நிர்வாகிகள் பங்கேற்றனர்.