ADDED : பிப் 07, 2024 11:47 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புவனகிரி: புவனகிரி போலீஸ் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்த சரஸ்வதி கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் போக்சோ மற்றும் பெண்கள் தடுப்பு பிரிவு இன்ஸ்பெக்டராக பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.
இதையடுத்து விழுப்புரம் மாவட்டம் மயிலம் போலீஸ் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்த லட்சுமி பணியிட மாற்றம் செய்யப்பட்டு, நேற்று புவனகிரி போலீஸ் நிலையத்தில் பொறுப்பேற்றார்.

