/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
வள்ளலார் கோவிலில் புதிய கொடி மரம் நிறுவல்
/
வள்ளலார் கோவிலில் புதிய கொடி மரம் நிறுவல்
ADDED : பிப் 21, 2024 10:44 PM

கடலுார் : கடலுாரில் சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கத்தில் புதிய கொடிமரம் நிறுவப்பட்டது.
கடலூர் மஞ்சக்குப்பம் பீச் ரோட்டில் சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம் (வள்ளலார் கோவில்) உள்ளது. வள்ளலார் இளைப்பாறிய சபையாக விளங்கி வருகிறது. இங்கு ஆண்டுதோறும் தைப்பூச ஜோதி தரிசன விழா நடந்து வருகிறது. இங்கு, புதிய கொடிமரம் நிறுவும் விழா நேற்று நடந்தது.
விழாவையொட்டி, காலை 6:30 மணிக்கு அகவல் ஓதுதல், 8:30 மணிக்கு கொடி மரம் திறப்பு மற்றும் கொடியேற்றுதல் நடந்தது. இதை தொடர்ந்து சாது சிவராமனார் தலைமையில் சிறப்பு சொற்பொழிவு நடந்தது. மதியம் 12:00 மணிக்கு 7 திரைகளை நீக்கி ஜோதி தரிசனம் காண்பிக்கப்பட்டது. இதில் துறவி குணா சுவாமி மற்றும் ஏராளமான பொதுமக்கள் தரிசனம் செய்தனர்.