ADDED : மார் 03, 2026 02:42 AM
அ நிறம் | அளவு
மந்தாரக்குப்பம்: கம்மாபுரம் ஒன்றிய ஊராட்சிகளில் நுாறு சதவீத வரி வசூலிக்க வேண்டும் என ஊராட்சி செயலாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கம்மாபுரம் ஒன்றியத்திற்கு உட்பட 43 ஊராட்சிகளில் இம்மாத இறுதிக்குள் ஊராட்சிகளுக்கு செலுத்த வேண்டிய சொத்துவரி, குடிநீர் வரி, தொழில்வரி உள்ளிட்ட வரியினங்களை பொதுமக்களிடம் இருந்து வசூலிக்க வேண்டும் என அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.
வரியினங்கள் வாயிலாக வரும் வருமானம் ஊராட்சிகளின் வளர்ச்சியில் முக்கிய பங்கு வகுக்கிறது. எனவே இம்மாத இறுதிக்குள் தீவிரமாக வரி வசூலிக்க வேண்டும் எனவும், வீடு வீடாக சென்று வரி வசூலிக்க வேண்டும், வரிகளை உரிய நேரத்தில் செலுத்த பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
