/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
தொழிலாளர் பாதுகாப்பு வாரம் தொழிற்சாலைகளுக்கு அறிவுறுத்தல்
/
தொழிலாளர் பாதுகாப்பு வாரம் தொழிற்சாலைகளுக்கு அறிவுறுத்தல்
தொழிலாளர் பாதுகாப்பு வாரம் தொழிற்சாலைகளுக்கு அறிவுறுத்தல்
தொழிலாளர் பாதுகாப்பு வாரம் தொழிற்சாலைகளுக்கு அறிவுறுத்தல்
ADDED : மார் 01, 2024 12:25 AM
கடலுார்: தேசிய பாதுகாப்பு தினத்தையொட்டி, தொழிற்சாலைகளில், ஒரு வாரம், தொழிலாளர் பாதுகாப்பு விழிப்புணர்வு ஏற்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து கடலூர் தொழிலகப் பாதுகாப்பு மற்றும் சுகாதார இணை இயக்குநர் சித்ரா வெளியிட்டுள்ள செய்திகுறிப்பு:
தேசிய பாதுகாப்பு குழுமத்திற்கு அனுமதி வழங்கிய மார்ச் 4ம் தேதி தேசிய பாதுகாப்பு தினமாக கொண்டாடப்படுகிறது.
அதையொட்டி, தொழிலகங்களில் வரும் 4ம் தேதி முதல் 10ம் தேதி வரை பாதுகாப்பு வாரம் கொண்டாடப்படுகிறது.
கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி மற்றும் செங்கல்பட்டு மாவட்ட தொழிற்சாலை நிர்வாகத்தினர் பணியிடத்தில் பாதுகாப்பு குறித்து கருத்தரங்குகள், கவிதை, கட்டுரை, பேச்சு போட்டி, பட்டிமன்றம், நாடகங்கள், கண்காட்சிகள் போன்ற நிகழ்ச்சிகளை நடத்த வேண்டும்.
இதன் மூலம் தொழிலாளர்கள் மத்தியில் பாதுகாப்பான பணி முறைகள், உண்மையான தொழில் முன்னேற்றம், சமுதாய முன்னேற்றம் ஏற்படுவதை உறுதி செய்ய வேண்டும்.
இந்த ஆண்டு, 'சுற்றுச் சூழல் சமூக தாக்கங்களை கூட்டாக நிர்வகிக்கும் ஆளுமைத்திறன் சிறந்து விளங்க, பாதுகாப்புமீது கவனம் கொள்வோம்' என்ற தலைப்பை மையமாக கொண்டு தொழிலா ளர்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்த வேண் டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

