/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
உளுந்து பயிர் சாகுபடிக்கு இன்சூரன்ஸ்: விவசாயிகள் அதிருப்தி
/
உளுந்து பயிர் சாகுபடிக்கு இன்சூரன்ஸ்: விவசாயிகள் அதிருப்தி
உளுந்து பயிர் சாகுபடிக்கு இன்சூரன்ஸ்: விவசாயிகள் அதிருப்தி
உளுந்து பயிர் சாகுபடிக்கு இன்சூரன்ஸ்: விவசாயிகள் அதிருப்தி
ADDED : நவ 22, 2025 05:42 AM
காட்டுமன்னார்கோவில்: காட்டுமன்னார்கோவில், சிதம்பரம் டெல்டா பகுதியில் கடந்த ஆண்டு சம்பா சாகுபடி அறுவடைக்கு பின் 80 ஆயிரம் ஏக்கர் பரப்பில் உளுந்து பயிர் சாகுபடி செய்யப்பட்டது.
கடந்தாண்டு உளுந்து பயிர் சாகுபடியில் மஞ்சள் நோய் தாக்குதல் ஏற்பட்டு விவசாயிகள் பாதிப்படைந்தனர். மஞ்சள் நோய்க்கு மருந்து தெளித்தும் கட்டுப்படுத்த முடியாமல் விவசாயிகள் தவித்தனர்.
இதனால் உளுந்து பயிர் சாகுபடியில் காய்ப்பு தன்மை குறைந்து மகசூல் 50 சதவீதத்திற்கு மேல் குறைந்தது. மேலும் உளுந்து பயிர் சாகுபடி அறுவடையின்போது திடீர் மழை ஏற்பட்டு மேலும் விவசாயிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தியது.
கடந்த ஆண்டு உளுந்து பயிர் சாகுபடியின் போது விவசாயிகள் பிரதமர் பயிர் காப்பீடு திட்டத்தின் கீழ் பயிர் காப்பீடு செய்தனர். டெல்டா பகுதியில், 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் உளுந்து பயிர் காப்பீடு செய்தனர்.
உளுந்து பயிர் சாகுபடியில் மகசூல் குறைந்து பாதிப்பு ஏற்பட்டதால் பயிர் காப்பீடு வழங்க வேண்டும் என விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை வைத்தனர்.
அதன் பேரில் பயிர் காப்பீடு நிறுவனம் சமீபத்தில், காட்டுமன்னார்கோவில் டெல்டா பகுதி விவசாயிகளுக்கு பயிர் காப்பீடு தொகை சொற்ப அளவில் வங்கிகளில் வரவு வைக்கப்பட்டுள்ளது. இதனால் டெல்டா விவசாயிகள் இடையே அதிருப்தி ஏற்பட்டுள்ளது. காட்டுமன்னார்கோயில் டெல்டா பகுதியில் ஏக்கர் ஒன்றுக்கு 8 முதல் 128 ரூபாய் அளவில் மட்டுமே மிக சொற்ப தொகை வழங்கப்பட்டுள்ளது. இதனால், விவசாயிகள் வேதனை அடைந்துள்ளது.
இது குறித்து அரசு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.

