ADDED : ஏப் 06, 2025 06:23 AM

அ நிறம் | அளவு
நெல்லிக்குப்பம : நெல்லிக்குப்பம் அடுத்த மேல்பட்டாம்பாக்கம் இன்டலிஜன்ட் சி.பி.எஸ்.இ.,பள்ளி துவக்க விழா மற்றும் ஆர்.ஆர்.மெட்ரிக் பள்ளியின் 21ம் ஆண்டு விழா நடந்தது.
ராஜாராம் அறக்கட்டளை சேர்மன் ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கினார். சன்மார்க் அறக்கட்டளை தலைவர் விஜயகுமார் முன்னிலை வகித்தார்.
நகராட்சி சேர்மன் ஜெயந்தி ராதாகிருஷ்ணன், மேல்பட்டாம்பாக்கம் பேரூராட்சி தலைவர் ஜெயமூர்த்தி வாழ்த்தி பேசினர்.
நடிகர்கள் நிக்கிதா ராஜேஷ், ஷியாம், பாபு, நாதன் ஷியாம், வைஷ்ணவி நாயக், சிவகவிதா, புனிதா ஆகியோர் மாணவ, மாணவிகளுக்கு பரிசு வழங்கினர்.
அன்னை தெரசா பொறியியல் கல்லுாரி சேர்மன் பிரகாஷ்மல் சோரடியா, நகராட்சி கமிஷனர் கிருஷ்ணராஜன், மேலாளர் சரவணன், தலைமையாசிரியை சுசித்ரா, நிர்வாக இயக்குனர்கள் ராமசந்திரன், உதயகுமார் உட்பட பலர் பங்கேற்றனர்.
