ADDED : மார் 21, 2026 05:13 AM

வேப்பூர்: சட்டசபை தேர்தலையொட்டி பணம், பரிசு பொருட்கள் கொண்டு செல்வதை தடுக்க விருத்தாசலம் தொகுதியில் தீவிர வாகன சோதனை மேற்கொள்ளப்படுகிறது.
கடலூர் மாவட்டத்தில், விருத்தாசலம், திட்டக்குடி(தனி), நெய்வேலி உட்பட 9 சட்டசபை தொகுதிகள் உள்ளன. சட்டசபை தேர்தல் அறிவிப்பை தொடர்ந்து தேர்தல் நன்னடத்தை விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டுள்ளன.
இந்நிலையில், உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லும் பணம் மற்றும் வாக்காளர்களுக்கு வழங்க எடுத்து செல்லும் பரிசுப் பொருட்கள் ஆகியவற்றை தடுக்கும் வகையில் தீவிரமாக கண்காணிப்பு பணியில்ஈடுபட்டுள்ளனர்.
விருத்தாசலம் சட்டசபை தொகுதியில் நியமிக்கப்பட்ட பறக்கும் படை குழுவினர், வீடியோ பதிவு மூலம் சுழற்சி முறையில் 24 மணி நேரமும், கடலூர்-சேலம் தேசிய நெடுஞ்சாலையில் பெரியநெசலுார், வேப்பூர் ஆஞ்சநேயர் கோவில், கண்டப்பங்குறிச்சி உட்பட பல்வேறு இடங்களில் வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
