தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/உயிரியல் அறிவு கண்டுபிடிப்பு  சர்வதேச மாநாடு 

உயிரியல் அறிவு கண்டுபிடிப்பு  சர்வதேச மாநாடு 

உயிரியல் அறிவு கண்டுபிடிப்பு  சர்வதேச மாநாடு 


ADDED : ஏப் 17, 2026 11:38 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 17, 2026 11:38 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கடலுார்: கடலுார் அடுத்த திருப்பனாம்பாக்கத்தில் முத்தாலம்மன் அறக்கட்டளை மற்றும் கலை மற்றும் அறிவியல் கல்லுாரி சார்பில், உயிரியல் அறிவு கண்டுபிடிப்பு என்ற தலைப்பில் சர்வதேச மாநாடு நடந்தது.

தமிழ்நாடு உயிர் தகவல் இயல் நிறுவனர் காங்கேயன் ஏற்பாடுகளை செய்து வரவேற்றார். அமெரிக்க டாக்டர் சுப்பையா, முன்னாள் ஆலோசகர் மதன் மோகன், உறுப்பினர் செயலர், தமிழ்நாடு மாநில உயர்கல்வி மன்ற உறுப்பினர் செயலர் வேல்முருகன், டாக்டர்கள் கவுதம், பாலசுப்ரமணியம், மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவன இயக்குனர் தணிகைவேலன், வெங்கடேஸ்வரா பாரா மெடிக்கல் கல்லுாரி டீன் ஆனந்தவாயரவேல், நியூ மெடிக்கல்ஸ் மருத்துவமனை டாக்டர் மார்க் கிரிஸ்டோபர், டாக்டர் விவேக் கோபாலன், வழக்கறிஞர் சிவக்குமார், வி.ஐ.டி., பல்கலை டாக்டர்கள் மோகனபிரியா, சஜிதா லுலு, ஏ.ஜி., பத்மாவதி மருத்துவமனை டாக்டர் அரவிந்தன், ஜீவனம் ஜெனோமிக் இயக்குனர் ரூபி சிங், காஷ்மீர் மத்திய பல்கலை டாக்டர் சின்னப்பன் பாஸ்கர், டி.ஒய். பட்டீல் பல்கலை டாக்டர் வினி மேத்தா, செயின்ட் ஜோசப் கல்லுாரி டாக்டர் புஷ்பம் மரிய ஆரோக்கியநாதன், டாக்டர்கள் ரித்திக் கேஷ்வாணி, இளங்கோ, நிறுவன இயக்குனர் பவித்ரா ஆகியோர் கருத்துரையாற்றினர்.

கருத்தரங்கில் துணை மேயர் தாமரைச்செல்வன் உட்பட பலர் பங்கேற்றனர். உயிரி தொழில்நுட்பம், உயிரி தகவல் இயல் மற்றும் உயிரி மருத்துவம் ஆகியவற்றில் உயிரியல் அறிவு கண்டுபிடிப்பு குறித்து மாநாட்டில் விளக்கம் அளிக்கப்பட்டது.

சுகாதாரம் மற்றும் விவசாய துறைகளில் பயன்படும் வகையில், உயிரியலில் ஏற்பட்டுள்ள சமீபத்திய கண்டுபிடிப்பு குறித்து ஆராய்ச்சியாளர்கள், கல்வியாளர்கள், துறைசார் வல்லுநர்கள் பங்கேற்று விவாதித்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us