ADDED : மார் 10, 2026 03:47 AM
அ நிறம் | அளவு
சிதம்பரம்: சிதம்பரம் காமராஜர் அரசு மருத்துவமனையில் உலகம் மகளிர் தின விழா நடந்தது.
மருத்துவமனை வளாகத்தில் நடந்த விழாவிற்கு முதன்மை மருத்துவ அதிகாரி லட்சுமி தலைமை தாங்கினார். சமூக ஆர்வலர் சண்முகசுந்தரம், மகேஸ்வரி ஆகியோர் மருத்துவமனையில் பணியாற்றும் பெண் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் ஊழியர்களுக்கு நினைவுப் பரிசு வழங்கினா்.
மூத்த வழக்கறிஞர் வேல்முருகன், நீர் நிலை பாதுகாப்பு சங்க தலைவர் செங்குட்டுவன் வாழ்த்துரை வழங்கினர். மருத்துவர்கள் ராகுல், வாசுகி, ஹேமலதா, சிவகாமி, குமாரதேவி மற்றும் சமூக ஆர்வலர்கள் ராமச்சந்திரன், அரவிந்த், சுவாமிநாதன், சாந்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
