/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
சுரங்கப்பாதையில் மழைநீர் போக்குவரத்து துண்டிப்பு
/
சுரங்கப்பாதையில் மழைநீர் போக்குவரத்து துண்டிப்பு
ADDED : டிச 03, 2024 06:36 AM

விருத்தாசலம்: சுரங்கப்பாதைகளில் மழைநீர் தேங்கியதால் 10க்கும் மேற்பட்ட கிராமங்களில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.
பெஞ்சல் புயல் காரணமாக விருத்தாசலம் பகுதியில் கடந்த மூன்று நாட்களாக கனமழை பெய்து வருவதால் நீர்நிலைகளில் தண்ணீர் நிரம்பியுள்ளன.
அதுபோல், விருத்தாசலம் - சென்னை ரயில்வே மார்க்கத்தில் உள்ள வயலுார், செம்பளாக்குறிச்சி மற்றும் சேலம் மார்க்கத்தில் உள்ள எருமனுார் சுரங்கப்பாதைகளில் மழைநீர் தேங்கி நிற்கிறது.
முழுமையாக மூழ்கியதால் 10க்கும் மேற்பட்ட கிராமங்களில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் 5 முதல் 10 கி.மீ., சுற்றிச் செல்லும் அவலம் உள்ளது.
சுரங்கப்பாதைகளில் மழைநீர் தேங்கி நிற்காத வகையில் நிரந்தரமாக சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.