ADDED : மார் 24, 2026 05:04 PM

அ நிறம் | அளவு
ராமநத்தம்: திட்டக்குடி தொகுதியில் தி.மு.க., சார்பில் போட்டியிட விருப்ப மனு தாக்கல் செய்த அமைச்சர் கணேசனிடம் நேர்காணல் நடந்தது.
சட்டசபை தேர்தலில் தி.மு.க., சார்பில் போட்டியிட விரும்பும் வேட்பாளர்களுக்கான நேர்காணல் சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடந்து வருகிறது. கடலுார் மாவட்டத்திற்கு உட்பட்ட திட்டக்குடி(தனி), விருத்தாசலம், நெய்வேலி, பண்ருட்டி உள்ளிட்ட சட்டசபை தொகுதிகளில் விருப்ப மனு தாக்கல் செய்தவர்களுக்கு நேர்காணல் நடந்தது.
அப்போது, திட்டக்குடி(தனி) சட்டசபை தொகுதியில் மீண்டும் போட்டியிட விருப்ப மனு கொடுத்த அமைச்சர் கணேசனிடம், முதல்வர் ஸ்டாலின், மூத்த நிர்வாகிகள் துரைமுருகன், பாலு, பாரதி, நேரு உள்ளிட்டோர் நேர்காணல் நடத்தினர்.
