ADDED : மார் 22, 2026 09:28 PM

அ நிறம் | அளவு
கடலுார்: சட்டசபை தேர்தலில் தி.மு.க., சார்பில் போட்டியிட விரும்பும் வேட்பாளர்களுக்கான நேர்காணல் சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடந்து வருகிறது.
புதுச்சேரியை தொடர்ந்து, தமிழகத்தில் போட்டியிட விருப்ப மனு கொடுத்தவர்களிடம் நேர்காணல் நடத்தப்பட்டு வருகிறது. நேற்று காலை கடலுார், விழுப்புரம் மாவட்டங்களில் விருப்பமனு கொடுத்தவர்களுக்கு நேர்காணல் நடந்தது. அதில் குறிஞ்சிப்பாடி தொகுதியில் போட்டியிட விருப்ப மனு கொடுத்த அமைச்சர் பன்னீர்செல்வத்திடம், முதல்வர் ஸ்டாலின், மூத்த நிர்வாகிகள் துரைமுருகன், பாலு, பாரதி, நேரு உள்ளிட்டோர் நேர்காணல் நடத்தினர். திங்கள் கிழமை இன்று மாலையுடன் நேர்காணல் நிறைவடைகிறது.
