தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/மாணவர்கள் பேட்டி

மாணவர்கள் பேட்டி

மாணவர்கள் பேட்டி


UPDATED : அக் 27, 2026 04:17 PM

ADDED : அக் 27, 2026 04:14 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 27, 2026 04:17 PM ADDED : அக் 27, 2026 04:14 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மாநில போட்டியில் பங்கேற்பது மகிழ்ச்சி

‘தினமலர்’ பட்டம் இதழ் நடத்திய வினாடி போட்டியில் முதலிடம் பிடித்தோம். இதன் மூலமாக புதுச்சேரியில் ஜனவரி 28ம் தேதி நடக்கும் மாநில அளவிலான மெகா வினாடி வினா போட்டியில் பங்கேற்க தகுதி பெற்றிருப்பது மகிழ்ச்சியாக உள்ளது. ‘தினமலர்’ பட்டம் மூலமாக பல்வேறு விஷயங்களை தெரிந்து கொண்டோம். குறிப்பாக, பட்டம் இதழில் கணிதம், அறிவியல், விளையாட்டு என, பல்வேறு தகவல்கள் இடம் பெற்றுள்ளது. இதனை தெரிந்து கொள்வது மட்டுமின்றி படிப்பில் கூடுதல் கவனம் செலுத்தவும் வாய்ப்பை ஏற்படுத்தி தருகிறது. அபிநயா, 9ம் வகுப்பு.

பொது அறிவு களஞ்சியம்‘தினமலர்’ பட்டம் இதழ் அனைத்து வகையிலும் உதவியாக உள்ளது. குறிப்பாக, கல்வியை கடந்து பொது விஷயங்களும் இடம் பெற்றுள்ளது. பட்டத்தில் ஒவ்வொரு பகுதியும் முக்கியமானதாக உள்ளது. கலெக்டர் ஆக வேண்டும் என்பது எனது ஆசை. இதற்கான பொது அறிவு சிந்தனைகளை தெரிந்து கொள்ளும் விஷயங்கள் பட்டம் இதழில் இடம் பெற்றுள்ளது. பொது அறிவு களஞ்சியாக பட்டம் இதழ் சிறந்து விளங்கி வருகிறது. ஜாபினா, 9ம் வகுப்பு.

வாழ்க்கையில் மாற்றம் ஏற்படுத்தும்‘தினமலர்‘ பட்டம் இதழை பிளஸ் 1 வகுப்பில் இருந்து படிக்க துவங்கியுள்ளேன். பட்டம் இதழ் பல வகையில் எனக்கு பயனுள்ளதாக உள்ளது. படிப்பு மட்டுமே வாழ்க்கை என நினைத்தேன். ஆனால், அதனையும் கடந்து பொது விஷயங்களையும் கற்றுக் கொள்ள ஊக்கம் அளித்தது. இதற்காக ‘தினமலர்’ நாளிதழிற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். பட்டம் இதழ் மூலமாக எனது வாழ்க்கையில் சிறந்த மாற்றத்தை ஏற்படுத்தும் என்ற நம்பிக்கை உள்ளது. மோகன ஹரிஷ், பிளஸ் 1.

மாணவர்களை ஊக்குவிக்கிறது ‘தினமலர்’ பட்டம் இதழில் அன்றாட நிகழ்வுகள் மட்டுமின்றி அறிவியல், தொழில்நுட்பம், கணிதம் என பல்வேறு தலைப்புகள் சார்ந்த விஷயங்கள் இடம் பெறுவது மாணவர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது. சிறப்பு விருந்தினர்கள் கூறிய அறிவுரைகள் மாணவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக இருந்தது. எதிர்காலத்திற்கு தேவையான ஆலோசனைகள் கிடைத்தது. அபிஷேக், பிளஸ் 1.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us