
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார் : கடலுார், திருப்பாதிரிப்புலியூர் அக்கிள் நாயுடு தெரு நாயுடு சங்கம் சார்பில் மணமக்கள் நேர்காணல் நிகழ்ச்சி நடந்தது.
திருப்பாதிரிப்புலியூரில் நடந்த நிகழ்ச்சியில் சங்க தலைவர் கமலநாதன் தலைமை தாங்கினார். துணைத் தலைவர் பராங்குசம், செயலாளர் ரமேஷ், பொருளாளர் ராமகிருஷ்ணன், செயற்குழு ராதாகிருஷ்ணன் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் 200க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.