/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
உள்வாங்கிய சாலை: விபத்து அபாயம்
/
உள்வாங்கிய சாலை: விபத்து அபாயம்
ADDED : நவ 27, 2025 04:41 AM

சேத்தியாத்தோப்பு: நவ. 27-: சேத்தியாத்தோப்பில் உள் வாங்கிய சாலையால் விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளதாக, குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
சென்னை-கும்பகோணம் சாலையில், சேத்தியாத்தோப்பு வெள்ளாறுராஜன் வாய்க்கால்கரை சாலையில், கடந்த மூன்று வாரங்களுக்கு முன் பிளவு ஏற்பட்டது.
இதையடுத்து விபத்து ஏற்படாமல் இருக்க பிளவு ஏற்பட்டுள்ள இடத்தில் போலீசார் பேரிகார்டு வைத்து வாகனங்களை எச்சரித்துள்ளனர்.
ஆனால், இரவு நேரங்களில் வரும் வாகனங்கள் பேரிகார்டுகளில் மோதி விபத்திற்குள்ளாகி வருகின்றனர்.
இந்த சாலை பிளவினை சீரமைக்காததால் கனரக வாகனங்கள், லாரிகள் பஸ்கள் என ஒரே நேரத்தில் ஒதுங்கி செல்ல முடியாமல் கடும் அவதிக்குள்ளாகின்றனர்.
அதனால் சம்மந்தப்பட்ட நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து போர்க்கால அடிப்படையில் விரைந்து சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

