/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
அண்ணாமலை பல்கலையில் வேளாண் படிப்பில் சேர அழைப்பு
/
அண்ணாமலை பல்கலையில் வேளாண் படிப்பில் சேர அழைப்பு
ADDED : அக் 09, 2025 02:26 AM
சிதம்பரம்: அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் வேளாண் மற்றும் தோட்டக்கலை பட்டப்படிப்பு காலி இடங்களுக்கு நேரடி சேர்க்கை நடைபெறும் என பல்கலை நிர்வாகம் அறிவித்துள்ளது.
சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் 2025 -26ம் கல்வி ஆண்டிற்கான வேளாண் பட்டப்படிப்பு (பி.எஸ்சி., ஹானஸ், விவசாயம்) மற்றும் தோட்டக்கலை பட்டப்படிப்பு (பி.எஸ்சி., (ஹானஸ்) தோட்டக்கலை படிப்புகளில் உள்ள காலி இடங்களுக்கு நேரடி மாணவர் சேர்க்கை வரும் 13ம் தேதி, காலை 10:00 மணி முதல் 1:00 மணி வரை, அரசு விதிப்படியும், இட ஒதுக்கீடு அடிப்படையில் நடக்க உள்ளது. சேர விரும்பும் மாணவர்கள் உரிய சான்றிதழ்களுடன் வேளாண் புலத்திற்கு குறிப்பிட்ட நேரத்திற்குள் வரவேண்டும். காலி இடங்கள் பற்றி, www.annamalaiuniversity.ac.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம் என பல்கலை நிர்வாகம் தெரி வித்துள்ளது.