ADDED : ஜன 20, 2025 11:51 PM
சிதம்பரம்; கடலூர் மாவட்ட சர்வோதய மண்டல் நடத்தும் கட்டுரை போட்டியில் பள்ளி, கல்லுாரி மாணவர்கள் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
காந்தி நினைவு நாளையொட்டி, மாவட்ட, சர்வோதய மண்டல் சார்பில் வரும் 30 ம் தேதி, அஞ்சல் வழி கட்டுரை போட்டி நடத்தப்பட உள்ளது. இதில், திசைமாறி பயணிக்கும் இளைஞர்களை காந்திய வழியில் எவ்வாறு மீட்டெடுக்கலாம், மறைந்து வரும் மனித நேயத்தை காந்திய வழியில் சீரமைப்பது, பொருளாதார சீரமைப்புக்கு காந்திய தீர்வுகள், எனது வாழ்க்கையில் காந்தியின் தாக்கங்கள், காந்தியின் பதினொரு மகாவிரதங்கள் ஆகிய 5 தலைப்புகளில், ஏதேனும் ஒரு தலைப்பில், 200 வார்த்தைகளுக்கு மிகாமல், கட்டுரை எழுதி, அதில், மாணவர் பெயர், தந்தையார் பெயர், வகுப்பு, பள்ளி / கல்லூரி பெயர், வீட்டு முகவரி, மொபைல் எண் ஆகியவற்றை குறிப்பிட்டு வரும் 25 ம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும்.
செயலாளர், எண் 50, லால்கான் தெரு, சிதம்பரம் - 608 001, மொபைல் 9443046295 என்ற முகவரிக்கு தபால் மூலம் அனுப்பி வைக்க வேண்டும். சிறந்த கட்டுரைகளுக்கு பரிசு வழங்கப்படும்.
இத்தகவலை கடலூர் மாவட்ட சர்வோதய மண்டல் செயலாளர் முத்துக்குமரன் தெரிவித்தார்.

