UPDATED : ஜூன் 14, 2026 03:50 PM
ADDED : ஜூன் 14, 2026 03:41 PM

பெண்ணாடம்:இறையூர் அய்யனார் குளத்தை துார் வார வேண்டும் கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பெண்ணாடம் அடுத்த இறையூர் ஊராட்சியில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். இப்பகுதி மக்கள் 30 ஆண்டுகளுக்கு முன் கொத்தட்டை செல்லும் சாலையோரம் உள்ள அய்யனார் கோவில் அருகே உள்ள குளத்து நீரை குளிக்க, துணி துவைக்கவும், கால்நடைகளின் குடிநீர் தேவைக்கு பயன்படுத்தி வந்தனர். நாளடைவில் பராமரிப்பு இல்லாததால் குளத்தில் சம்பு, கோரைகள் அதிகளவில் வளர்ந்து துார்ந்துள்ளது. மேலும், குடியிருப்புகளில் இருந்து வெளியேற்றும் கழிவுகளும் தேங்கி நிற்கிறது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது.
கிராம மக்கள் குளத்தின் ஆக்கிரமிப்புகளை அகற்றி, துார்வார வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். அதையேற்று, கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் பெயரளவில் சில இடங்களில் மட்டுமே ஆக்கிரமிப்புகளை அகற்றி, துார்வாராமல் பணிகளை கிடப்பில் போட்டனர். இதனால் குளம் துார்வாராமல் சம்பு, கோரைகள் மீண்டும் அதிகளவில் மண்டியுள்ளதால் குளத்து நீரை இதுநாள் வரை பயன்படுத்த முடியாத நிலை தொடர்கிறது.
எனவே, இறையூர் அய்யனார் குளத்தை துார்வார ஊராட்சி நிர்வாகம், ஒன்றிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
