ADDED : ஜூலை 25, 2025 10:45 PM
சேத்தியாத்தோப்பு; சேத்தியாத்தோப்பு அருகே பெலாந்துறை அணைக்கட்டு பாசன வாய்க்காலை பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து அளவீடு செய்யும் பணியை துவக்கினர்.
சேத்தியாத்தோப்பு அடுத்த மழவராயநல்லுார், முடிகண்டநல்லுார், சாந்திநகர், குமாரக்குடி ஆகிய விளைநிலங்கள் மத்தியில் ெபலாந்துறை அணைக்கட்டு பாசன வாய்க்கால் செல்கிறது.
பாசன வாய்க்கால் துார்வாரி பல ஆண்டுகள் ஆன நிலையில் மழைக் காலங்களில் வெள்ள நீர் விளைநிலங்களில் தேங்கி நெற்பயிர்கள் சேதமடைகிறது.
வாய்க்காலை அளவீடு செய்து துார்வார வேண்டும் என, தமிழக ஏரிகள் மற்றும் பாசன சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இதன் எதிரொலியாக மழவராயநல்லுாரில் பெலாந்துறை பாசன வாய்க்காலை நேற்று விருத்தாசலம் பாசனப்பிரவு உதவி பொறியாளர் சாய்பிரசன்னா, ஸ்ரீமுஷ்ணம் பொதுப்பணித்துறை பாசனப்பிரிவு உதவி பொறியாளர் ரவிச்சந்திரன் ஆகியோர் ஆய்வு செய்து, துார்வார அளவீடு பணி மேற்கொண்டனர்.