/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
பாசன வாய்க்காலில் ரூ. 4.86 கோடியில் ரெகுலேட்டர்
/
பாசன வாய்க்காலில் ரூ. 4.86 கோடியில் ரெகுலேட்டர்
ADDED : பிப் 15, 2024 10:27 PM

புதுச்சத்திரம்: புதுச்சத்திரம் அருகே கழுதைவெட்டி வாய்க்காலில், ரூ. 4.86 கோடியில் ரெகுலேட்டர் அமைக்கப்படுகிறது.
புதுச்சத்திரம் அடுத்த தச்சக்காடு - மணிக்கொல்லை கிராமத்திற்கு இடையே கழுதைவெட்டி வாய்க்கால்உள்ளது. இதன் மூலம், 2,350 ஏக்கர் நிலங்கள் பாசனம் பெறுகிறது. இந்த வாய்க்கால் துார்ந்து போனதால், சீரமைக்கக்கோரி விவசாயிகள் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.
அதன்பேரில், நபார்டு வங்கி நிதியுதவி மூலம், கழுதைவெட்டி வாய்க்காலை 11 கி.மீதூர்வாரி கரையை சீரமைத்தல், பெரியக்குமட்டி, சேந்திரக்கிள்ளை, வில்லியநல்லூர் பகுதிகளில் ரெகுலேட்டர் அமைத்தல் சேதமடைந்த வாய்க்கால் கரைகளை சீரமைத்து தடுப்புச்சுவர் கட்டுதல்,கழுதைவெட்டி வாய்க்காலை அளவீடு செய்து எல்லை கற்கள் நடுதல் உள்ளிட்ட பணிகளுக்கு ரூ. 4.86 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
அதையடுத்து, சேந்திரக்கிள்ளையில் ரெகுலேட்டர் அமைப்பதற்கு, பூமிபூஜை போடும் பணிநேற்று நடந்தது. இதில் கொள்ளிடம் வடிநில கோட்டம் செயற்பொறியாளர் காந்தரூபன், உதவிசெயற்பொறியாளர் சரவணன், விவசாய சங்க தலைவர் கோதண்டராமன், கிராம நிர்வாகிகள் ரெங்கநாதன், கோதண்டராமன், சம்பத், கோதண்டராமன், ஓய்வுபெற்ற என்.எல்.சி., அலுவலர் கோவிந்தராசு உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.