ADDED : மார் 22, 2026 04:42 AM
வரும் 2026 சட்டசபை தேர்தலில், மீண்டும் ஆட்சியை தக்க வைக்க கூட்டணி கட்சிகளுடன் தி.மு.க., தீவிரம் காட்டி வருகிறது. அதேபோல, அ.தி.மு.க., கூட்டணி மற்றும் நா.த.க., - த.வெ.க., உட்பட அரசியல் கட்சிகள் தனித்தனியே ஆட்சியை பிடிக்க, களத்தில் போராடி வருகின்றன.
அதன்படி, திட்டக்குடி (தனி) தொகுதியில் போட்டியிட தி.மு.க., கூட்டணியில் உள்ள கட்சியினர் அடம் பிடித்தாலும், சிட்டிங் எம்.எல்.ஏ.,வும், அமைச்சருமான கணேசனுக்கு தான் கட்சி தலைமை 'சீட்' ஒதுக்கும் என்றும், அவரை தவிர யாரும் இல்லை என்ற கணக்கில் தி.மு.க.,வினர் தெளிவாக உள்ளனர். ஆனால், அ.தி.மு.க., கூட்டணியில் இதுவரை தொகுதி பங்கீடு செய்யப்படாததால் கூட்டணியில் திட்டக்குடி தொகுதி எந்த கட்சிக்கு ஒதுக்கப்படும் என தெரியாமல் குழப்பத்தில் உள்ளனர்.
அ.தி.மு.க.,வுக்கு தான் சீட் ஒதுக்கப்படும் என்ற நம்பிக்கையில் அக்கட்சியினர் விளம்பரம் எழுத சுவர்களில் வண்ணம் அடித்து காத்திருக்கின்றனர்.
