/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
ஈஷா காவேரி கூக்கரல் இயக்கம்: கோவில் காடுகள் வளர்க்க திட்டம்
/
ஈஷா காவேரி கூக்கரல் இயக்கம்: கோவில் காடுகள் வளர்க்க திட்டம்
ஈஷா காவேரி கூக்கரல் இயக்கம்: கோவில் காடுகள் வளர்க்க திட்டம்
ஈஷா காவேரி கூக்கரல் இயக்கம்: கோவில் காடுகள் வளர்க்க திட்டம்
ADDED : அக் 14, 2025 07:07 AM

குள்ளஞ்சாவடி; ஈஷாவின் காவேரி கூக்குரல் இயக்கம், பேரூர் மற்றும், தருமபுரம் ஆதீனங்கள் இணைந்து, கோவில் காடுகள் திட்டத்தை முன்னெடுத்துள்ளனர்
விவசாயிகளின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில், சத்குரு ஈஷா மையம் சார்பில், காவேரி கூக்குரல் இயக்கத்தின் சார்பில் காவேரி வடிநிலப் பகுதிகளில் உள்ள விவசாய நிலங்களில் மரங்கள் நடவு செய்யப்படுகிறது.
கடலூர், திருவண்ணாமலை மற்றும், கோவை என, 3 இடங்களில் மரக்கன்றுகளை உற்பத்தி செய்யும் ஈஷா நர்சரி மூலம் இப்பணிகள் நடைபெறுகிறது.
கடலூர் மாவட்டம் குள்ளஞ்சாவடி பகுதியில் அமைந்துள்ள பிரம்மாண்ட நாற்றுப்பண்ணையில், 30 ஏக்கர் பரப்பளவில் ஆண்டுக்கு, 85 லட்சம் மரக்கன்றுகள் உற்பத்தி செய்யப்படுகிறது.
கோவில் காடுகள் பெருமளவில் அழிந்து வரும் சூழ்நிலையில், எதிர்கால சந்ததியினரின் எதிர்காலத்திற்காக, கோயில் காடுகள் திட்டத்தை, ஈஷா காவேரி கூக்கரல் இயக்கம், பேரூர் மற்றும், தருமபுரம் ஆதீனங்கள் இணைந்து முன்னெடுத்துள்ளன.
இதன்படி பேரூர் ஆதீனத்தின் சார்பில், ஒரு கிராமம் ஒரு அரசமரம் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
நேற்று குள்ளஞ்சாவடி, சுப்ரமணியபுரம் பகுதியில் உள்ள ஈஷா நர்சரி பண்ணையில், பேரூர் ஆதீனம் தவத்திரு சாந்தலிங்க மருதாசல அடிகளார் கலந்து கொண்டு அரச மரக்கன்று ஒன்றை நட்டு வைத்தார்.
தருமபுரம் ஆதீனம் நிர்வாகி பாலாஜி, காவேரி கூக்குரல் ஒருங்கிணைப்பாளர் தமிழ்மாறன், அகில பாரத சன்னியாசிகள் சங்க பொது செயலாளர் அஜய் சைதன்யா, ஈஷா யோகா மையம் தன்னார்வலர் சுவாமி அலோகா உடனிருந்தனர்.