/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
ஈஷா கிராமோத்சவம் விளையாட்டு போட்டி
/
ஈஷா கிராமோத்சவம் விளையாட்டு போட்டி
ADDED : நவ 28, 2024 07:01 AM

மந்தாரக்குப்பம்,: கிராமப்புற மக்களுக்காக 'ஈஷா கிராமமோத்சவம்' எனும், 2 நாட்கள் வாலிபால் முதற்கட்ட போட்டிகள் மந்தாரக்குப்பம் என்.எல்.சி., மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் நடைபெற்றது. போட்டியை பள்ளி தலைமையாசிரியர் மெர்சி, வள்ளிவிலாஸ் அர்ஜூன் ஆகியோர் துவக்கி வைத்தனர். வடலுார் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளிலிருந்து 41 அணிகள் பங்கேற்றன.
போட்டியில் முதல் பரிசை மருவாய் விமல் பிரண்ட்ஸ் அணியும், இரண்டாம் பரிசை நைனார்குப்பம் என்.என்.கே.,அணியும், மூன்றாம் பரிசை அன்னதானம்பேட்டை அணியும், நான்காம் பரிசை கீழுர் கே.எஸ்., அணியும் வென்றது.
வெற்றி பெற்ற அணிகளுக்கு டி.ஆர்.எம்., சாந்தி பர்னிச்சர் உரிமையாளர் ராஜமாரியப்பன், பாலமுருகன் ஆகியோர் பரிசு மற்றும் கோப்பை வழங்கினார். ஒருங்கிணைப்பாளர்கள் சீனிவாசன், நடராஜன்,ரெங்கராஜன், த.வா.க., ஒன்றிய தலைவர் கொளஞ்சிநாதன், மாவட்ட துணை செயலாளர் ரவிச்சந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இறுதி கட்ட போட்டியில் வெற்றி பெறும் அணியினர் கோவை ஈஷா யோகா மையத்தில் நடைபெறும் போட்டியில் பங்கேற்க உள்ளனர்.