
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புவனகிரி; புவனகிரி மேற்கு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி மாணவர்களுக்கு உண்டியல் வழங்கப்பட்டது.
கடலுார் மாவட்டத்தில் காலாண்டு விடுமுறை முடிந்து நேற்று முன்தினம் அரசு மற்றும் தனியார் பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டன. புவனகிரி மேற்கு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியர் சத்தியநாராயணன், மாணவர்களுக்கு இரண்டாம் பருவ பாடப்புத்தகங்கள் வழங்கினார்.
மேலும், சேமிப்பு பழக்கத்தை ஏற்படுத்தும் வகையில், பிறந்த நாள் கொண்டாடிய மாணவர்களுக்கு உண்டியல் வழங்கினார்.