/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
ராமர் கோவில் கும்பாபிேஷக அழைப்பிதழ் வழங்கல்
/
ராமர் கோவில் கும்பாபிேஷக அழைப்பிதழ் வழங்கல்
ADDED : ஜன 15, 2024 06:38 AM

மந்தாரக்குப்பம் : மந்தாரக்குப்பம் பகுதியில் பா.ஜ., சார்பில் பொதுமக்களுக்கு ராமர் கோவில் கும்பாபிேஷக விழா அழைப்பிதழ் வழங்கப்பட்டது.
அயோத்தி ராமர் கோவில் கும்பாபிேஷகம் வரும் 22ம் தேதி நடக்கிறது. இதனை முன்னிட்டு பா.ஜ., சார்பில் மாவட்ட பொருளாளர் முருகன் தலைமையில் ராமர் கோவில் கும்பாபிேஷகம் அழைப்பிதழ் மற்றும் கோவில், ராமர் படம், அட்சதை வீடுதோறும் வழங்கப்பட்டு வருகிறது.
மந்தாரக்குப்பம் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கடைகள் மற்றும் வீடு வீடாக சென்று அழைப்பிதழ் வழங்கும் பணி நடக்கிறது. ஒன்றிய தலைவர் சின்னதுரை, மாவட்ட ஓ.பி.சி., அணி பொது செயலாளர் ரவீந்திரன், பேரூராட்சி கவுன்சிலர் தங்கமணி, மாவட்ட செயற்குழு உறுப்பினர் ராஜ், ஒன்றிய செயலாளர் தேவப்பெருமாள், நிர்வாகி முருகானந்தம் உட்பட பலர் உடனிருந்தனர்.