/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
சிறு சேமிப்பு திட்டம் சான்றிதழ் வழங்கல்
/
சிறு சேமிப்பு திட்டம் சான்றிதழ் வழங்கல்
ADDED : அக் 27, 2024 06:26 AM

கடலுார், : கடலுார் தலைமை அஞ்சலகத்தில் 'என் முதல் சேமிப்பு' என்ற தலைப்பில் சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
இந்திய அஞ்சல்துறையின் தமிழ்நாடு வட்டம், மத்திய மண்டலம் சார்பில் கடலுார் அஞ்சல் கோட்டத்தில் குழந்தைகளுக்கு சிறுசேமிப்பு திட்டத்தில் சேர பெற்றோரை ஊக்குவிப்பதற்காக நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
கடலுார் அஞ்சல் கோட்டத்திற்கு உட்பட்ட அஞ்சலகங்களில் சிறுசேமிப்பு திட்டத்தில் சேர்ந்து கணக்கு தொடங்கிய 3 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு, திருச்சி மத்திய மண்டல அஞ்சல் துறைத் தலைவர் நிர்மலாதேவி தலைமை தாங்கி, சான்றிதழ் வழங்கி பேசினார்.
நிகழ்ச்சியில் கடலுார் கோட்ட அஞ்சல் கண்காணிப்பாளர் கணேஷ், உதவி கண்காணிப்பாளர்கள் ஆசைதம்பி, நீரஜ்குமார், ஆய்வாளர்கள் வடிவேலன், பழனிமுத்து, தலைமை அஞ்சலக அலுவலர் கோவிந்தராஜன் பங்கேற்றனர்.