ADDED : நவ 27, 2025 04:46 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெண்ணாடம்: பெண்ணாடம் பேரூராட்சியில் புதிதாக கவுன்சிலராக நியமிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிக்கு நியமன ஆணை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
மாற்றுத்திறனாளி ஒருவரை ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் நியமன உறுப்பினராக நியமிக்க வேண்டும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
அதன்படி, பெண்ணாடம் தேர்வுநிலை பேரூராட்சி கவுன்சிலர் குழுவில், பெண்ணாடம் திருநாவுக்கரசு என்ற மாற்றுத்திறனாளியை கவுன்சிலராக கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் நியமித்துள்ளார்.
இந்த நியமன ஆணையை திருநாவுக்கரசிடம், பேரூராட்சி செயல் அலுவலர் முத்து முன்னிலையில், பேரூராட்சி சேர்மன் அமுதலட்சுமி ஆற்றலரசு வழங்கினார்.
அப்போது, துணை சேர்மன் குமரவேல், இளநிலை உதவியாளர் ரமேஷ், வார்டு கவுன்சிலர்கள், பேரூராட்சி பணியாளர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.

