/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
எம்.ஆர்.கே., கல்லுாரியில் பணி ஆணை வழங்கல்
/
எம்.ஆர்.கே., கல்லுாரியில் பணி ஆணை வழங்கல்
ADDED : ஜூன் 29, 2025 07:01 AM

காட்டுமன்னார்கோவில் : காட்டுமன்னார்கோவில் எம்.ஆர்.கே., பொறியியல் கல்லுாரியில் மாணவர்கள் பணி ஆணை வழங்கும் விழா நடந்தது.
காட்டுமன்னார்கோவில் எம்.ஆர்.கே., பொறியியல் கல்லுாரியில் அனைத்து துறை இறுதியாண்டு மாணவ, மாணவிகளுக்கு வேலை வாய்ப்பு முகாம் நடத்தப்பட்டது. இதில் பல்வேறு தனியார் கம்பெனிகள் பங்கேற்று நேர்காணல் நடத்தி மாணவர்களை தேர்வு செய்தது.
முகாமில் தேர்வான மாணவர்களுக்கு பணி ஆணை வழங்கும் விழா நேற்று நடந்தது. கல்லுாரி சேர்மன் கதிரவன் தலைமை தாங்கினார். முதல்வர் ஆனந்தவேலு வரவேற்றார். நிர்வாக அதிகாரி கோகுலகண்ணன், மேலாளர் விஸ்வநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சிறப்பு விருந்தினர் சென்னை ெஹச்.சி.எல்.,டெக்னாலஜிஸ் மண்டல மேலாளர் வினோத்,இ-சேல்ஸ் அண்ட் கேரியர் கிராஃப்ட் அகாடமி நிறுவன தலைமை நிர்வாக அதிகாரி கிஷோர் பூனமல்லே ஆகியோர் பங்கேற்று 238 பேருக்கு பணி நியமன ஆணை வழங்கினர். பேராசிரியை சிவப்பிரியா நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.
வேலைவாய்ப்பு அதிகாரி அகிலன் நன்றி கூறினார்.