ADDED : மார் 14, 2026 05:26 AM

கடலுார்: கடலுாரில் கூட்டுறவுத்துறையில் கருணை அடிப்படையிலான பணி நியமன ஆணை வழங்கல், சிறுதானியம் பதனிடும் அலகு துவக்க நிகழ்ச்சி நடந்தது.
நிகழ்ச்சிக்கு கலெக்டர் சிபிஆதித்யா செந்தில்குமார் தலைமை தாங்கி, கூட்டுறவுத்துறையின் கீழ் செயல்படும் சிறுமுளை மற்றும் மேல்குமாரமங்கலம் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கத்தில் கருணை அடிப்படையிலான பணி நியமன ஆணையை வழங்கினார்.
தொடர்ந்து விருத்தாசலம் வேளாண் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில், 2024--25ம் ஆண்டு நல்லுார் வட்டாரம் வளமிகு வட்டார வளர்ச்சி திட்டத்தின் கீழ், 16 லட்ச ரூபாய் மதிப்பில் சிறுதானியம் பதனிடும் அலகை துவக்கி வைத்தார்.
மேலும் மாவட்டத்தில் லாபத்தில் செயல்படும் கூட்டுறவு சங்கங்கள் செலுத்த வேண்டிய சட்டப்பூர்வ நிதியை மாவட்ட கூட்டுறவு ஒன்றியத்தின் மேலாண் இயக்குனர் ராஜமுத்துவிடம் வழங்கினார்.
நிகழ்ச்சியில், கடலுார் மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் இளஞ்செல்வி, இணைப்பதிவாளர் அலுவலக நேர்முக அலுவலர் சுகந்தலதா, கடலுார் சரக துணைப்பதிவாளர் மயூரி, விருத்தாசலம் வேளாண் உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்கத்தின் மேலாண்இயக்குனர் சுரேஷ், இணைப்பதிவாளர் அலுவலக கண்காணிப்பாளர் பாலகிருஷ்ணன், மாவட்ட திட்டக்குழு அலுவலர் மற்றும் கூட்டுறவுத்துறை அலுவலர்கள், சங்க பணியாளர்கள் பங்கேற்றனர்.
