/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
அரசு பஸ் மோதி ஐ.டி.ஐ., மாணவர் பலி
/
அரசு பஸ் மோதி ஐ.டி.ஐ., மாணவர் பலி
ADDED : ஜூலை 31, 2025 03:42 AM

சிதம்பரம்: அரசு பஸ் மோதிய விபத்தில் பைக்கில் சென்ற ஐ.டி.ஐ., மாணவர் இறந்தார்.
சிதம்பரம் அடுத்த நலன்புத்துாரை சேர்ந்தவர் முருகன் மகன் கார்த்திக்,17; சிதம்பரம் அரசு நந்தனார் ஐ.டி.ஐ., இறுதியாண்டு மாணவர். அதே பகுதியை சேர்ந்த இவரது நண்பர் இன்பரசன் மகன் முகிலன்,17; நேற்று முன்தினம் இருவரும் பைக்கில் கீரப்பாளையம் சென்று கொண்டிருந்தனர். பைக்கை கார்த்திக் ஓட்டினார். மணலுார் மேம்பாலம் ஜங்ஷன் அருகே வந்த போது, எதிரில் ஆண்டிமடத்தில் இருந்து சிதம்பரம் நோக்கி வந்த அரசு பஸ், பைக் மீது மோதியது.
இதில், பலத்த காயமடைந்த இருவரையும் அருகில் இருந்தவர்கள் மீட்டு மாவட்ட அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பினர். இதில், கார்த்திக் செல்லும் வழியில் இறந்தார்.
முகிலன் மேல்சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மரில் அனுமதிக்கப்பட்டார். சிதம்பரம் தாலுகா போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.