தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ குளத்தில் தவறி விழுந்து ஐ.டி.ஐ.,மாணவர் பலி

 குளத்தில் தவறி விழுந்து ஐ.டி.ஐ.,மாணவர் பலி

 குளத்தில் தவறி விழுந்து ஐ.டி.ஐ.,மாணவர் பலி


ADDED : பிப் 21, 2026 05:04 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 21, 2026 05:04 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஸ்ரீமுஷ்ணம்: ஸ்ரீமுஷ்ணம் அரசன்குட்டைத்தெருவை சேர்ந்தவர் செல்வம். முடி திருத்தும் தொழிலாளி. இவரது ஒரே மகன் விக்னேஷ்,18;

இவர் ஸ்ரீமுஷ்ணம் அருகே தேத்தாம்பட்டு, ஐ.டி.ஐ.,யில் படித்து வந்தார். நேற்று மாலை ஸ்ரீமுஷ்ணத்தில் நடந்த அம்மன்கோவில் தீமிதி திருவிழாவில் பங்கேற்க காப்பு கட்டிய பின்னர் தனது நண்பர்களுடன் திருக்குளத்தில் இறங்கி குளித்தார்.

அப்போது எதிர்பாராத விதமாக கால் தவறி நீரில் மூழ்கினார். உடனே அருகில் இருந்தவர்கள் கூச்சலிட்டதை தொடர்ந்து, நீரில் மூழ்கிய விக்னேஷை நண்பர்கள் மற்றும் பொதுமக்கள் தேடிப்பார்த்தும் கிடைக்கவில்லை. சிறி து நேரம் கழித்து அவரை தொடர்ந்து தேடிய நிலையில் மீட்டு, அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சென்று பரிசோதித்தனர். அவர் இறந்து போனது தெரிந்தது. ஸ்ரீமுஷ்ணம் போலீசார் அவரது சடலத்தை கைப்பற்றி, விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us