ADDED : ஜன 14, 2024 04:31 AM

விருத்தாசலம், : அ.தி.மு.க., ஜெ., பேரவை மாநில துணை செயலாளராக விருத்தாசலம் முன்னாள் நகராட்சி சேர்மன் அருளழகன் நியமிக்கப்பட்டுள்ளார்.
அவர் கட்சி நிர்வாகிகளுடன் நேற்று விருத்தாசலம் வானொலி திடலில் உள்ள அண்ணாதுரை சிலை மற்றும் ஸ்டேட் பாங்க் அருகே உள்ள எம்.ஜி.ஆர்., சிலை மற்றும் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
அப்போது, மாவட்ட அவைத் தலைவர் தங்கராசன், மாவட்ட துணை செயலாளர் ரவிச்சந்திரன், ஒன்றிய செயலர்கள் மருதை முனுசாமி, பச்சமுத்து, தம்பிதுரை, வேல்முருகன், சின்ன ரகுராமன், விருத்தாசலம் நகர செயலாளர் சந்திரகுமார், பேரூர் செயலாளர் பாலமுருகன், விழுப்புரம் மண்டல தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் அருண், மாவட்ட பாசறை செயலாளர் ரமேஷ் , பொதுக்குழு உறுப்பினர்கள் புஷ்பா வேங்கடவேணு, மணி, பாஸ்கர், உமர் முக்தார், அரங்க மணிவண்ணன், ஆண்டாள் கலிவரதன், சத்யா செல்வம், வளர்மதி கண்ணன், சுப்பு பிள்ளை, சுரேஷ், அருள், மணி, ரவி, ஜெயபாலன், திருப்பதி, விக்னேஷ், மாதவன், பன்னீர், ஆராமுதன், மும்தாஜ், ரத்னசாமி, அமிர்தராஜ் மற்றும் நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.

