/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
நெய்வேலி பகுதியில் ஜெ., பிறந்த நாள் விழா
/
நெய்வேலி பகுதியில் ஜெ., பிறந்த நாள் விழா
ADDED : பிப் 25, 2024 04:22 AM

நெய்வேலி : நெய்வேலி அருகே முத்தாண்டிகுப்பத்தில், ஜெயலலிதா பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.
அ.தி.மு.க., கடலுார் தெற்கு மாவட்ட செயலாளர் சொரத்துார் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். ஜெ., பேரவை மாநில துணை செயலாளரான முன்னாள் எம்.எல்.ஏ., சிவசுப்ரமணியன் முன்னிலை வகித்தார்.
பண்ருட்டி தெற்கு ஒன்றிய செயலாளர் கமலகண்ணன் வரவேற்றார். நிகழ்ச்சியில் பொதுமக்களுக்கு இனிப்பு மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. அ.தி.மு.க.,வின் கட்சி மற்றும் தொழிற்சங்கம் உள்ளிட்ட சார்பு அணிகளின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். தெற்கு மாவட்ட இணை செயலாளர் குணசேகரன் நன்றி கூறினார்.
மந்தாரக்குப்பம்
நெய்வேலி மந்தாரக்குப்பம் பகுதியில் உள்ள வார்டுகளில் கொடியேற்றி, கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது.
கடை வீதியில் ஜெய லலிதா படத்திற்கு எம்.எல்.ஏ., அருண்மொழிதேவன் மலர் துாவி மரியாதை செலுத்தினார். பொதுமக்களுக்கு உணவு மற்றும் இனிப்புகள் வழங்கி பேசினார்.
மாவட்ட ஜெ., பேரவை செயலாளர் உமா மகேஸ்வரன், கெங்கைகொண்டான் நகர செயலாளர் மனோகரன், மாவட்ட துணை செயலாளர் ரவிச்சந்திரன், மாவட்ட எம்.ஜி.ஆர்.மன்ற துணை செயலாளர் முருகுமணி, ஒன்றிய செயலாளர் சின்னரகுராமன், கவுன்சிலர் ராஜ்மோகன், மாலா சதீஷ்குமார், வழக்கறிஞர் முகமதுநாசர், நிர்வாகிகள் ராஜபாண்டியன், ஆறுமுகம், ராஜவர்மன், ேஷக்முகமது, பாலா, சலாம், மகளிரணி தமிழரசி, லட்சுமி, குப்புசுந்தரம் உட்பட பலர் பங்கேற்றனர்.