ADDED : மார் 14, 2024 05:02 AM

புவனகிரி : புவனகிரி ஒன்றியம், லால்புரம் எம்.ஆர்.வி., நகரில் ஜெ., பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.
மேல் புவனகிரி ஒன்றியம், லால்புரம் எம்.ஆர்.வி., நகரில் நடந்த நிகழ்ச்சியில் ஒன்றிய கவுன்சிலர் லதா ராஜேந்திரன் தலைமை தாங்கினார். ஒன்றிய துணை சேர்மன் வாசுதேவன் வரவேற்றார்.
முன்னாள் அமைச்சர் செல்வி ராமஜெயம், மாவட்ட பொருளாளர் தோப்புசுந்தர், அவைத்தலைவர் குமார், இலக்கியஅணி தில்லைகோபி, மாவட்ட தொழில்நுட்ட பொருளாளர் சாமிநாதன் முன்னிலை வைத்தனர்.
மாவட்ட செயலாளர் பாண்டியன் எம்.எல்.ஏ., கட்சி கொடியேற்றி, வேட்டி, சேலை மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.
நிகழ்ச்சியில் மாவட்ட பிரதிநிதி ராஜேந்திரன், புவனகிரி ஒன்றிய இளைஞரணி செழியன், ஊராட்சி தலைவர் சுடர்விழிஅன்பரசன், கட்சி நிர்வாகிகள் சந்திரசேகர், மாரியப்பன், சுப்ரமணியன், கிருஷ்ணமூர்த்தி, நடராஜன், தொழில்நுட்ப பிரிவு ஜானகிராமன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். எம்.ஆர்.வி., நகர் சங்கத் தலைவர் தருமலிங்கம் நன்றி கூறினார்.
