/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
ஜெ., நினைவு தினம் மா.செ., அழைப்பு
/
ஜெ., நினைவு தினம் மா.செ., அழைப்பு
ADDED : டிச 02, 2024 04:33 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிதம்பரம், : முன்னாள் முதல்வர் ஜெ., நினைவு தினத்தையொட்டி நலத்திட்ட உதவி வழங்க மாவட்ட செயலாளர் பாண்டியன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அவரது அறிக்கை:
அ.தி.மு.க., பொது செயலாளர் பழனிசாமி உத்தரவின் பேரில், மறைந்த முன்னாள் முதல்வர் ஜெ.,வின் 8ம் ஆண்டு நினைவு தினம், வரும் 5ம் தேதி அனுஷ்டிக்கப்படுகிறது. அன்றைய தினம், சிதம்பரம், காட்டுமன்னார்கோவில் சட்டசபை தொகுதிகளில் உள்ள மாவட்ட, ஒன்றிய, நகர, கிளை கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் தங்களது பகுதியில் ஜெ., படத்திற்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தி, நலத்திட்ட உதவிகள் வழங்க வேண்டும்.
இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.