/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
ஜாக்டோ-ஜியோவினர் மறியல்: 190 பேர் கைது
/
ஜாக்டோ-ஜியோவினர் மறியல்: 190 பேர் கைது
ADDED : ஜன 31, 2024 07:27 AM

கடலுார் : கடலுாரில் சாலை மறியலில் ஈடுபட்ட ஜாக்டோ-ஜியோ அமைப்பை சேர்ந்த 190 பேர் கைது செய்யப்பட்டனர்.
பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ ஜியோ அமைப்பினர் நேற்று மாநிலம் தழுவிய போராட்டம் நடத்தினர்.
கடலுாரில், பழைய கலெக்டர் அலுவலகம் எதிரில் நடந்த போராட்டத்திற்குமாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் அரிகிருஷ்ணன், மணவாளன், அம்பேத்கர் தலைமை தாங்கினர். அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் ரவிச்சந்திரன், தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி பாலமுரளிகிருஷ்ணன், நிர்வாகிகள் கேத்ரின், சிற்றரசன், மணவாளன் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.
அனைத்துத்துறை ஓய்வூதியர் கூட்டமைப்பு தலைவர் புருேஷாத்தமன் வாழ்த்துரை வழங்கினார். வருவாய் துறை சங்கரலிங்கம், தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்ற வாசுதேவன், கிறிஸ்டோபர் சிறப்புரையாற்றினர். மாநில ஒருங்கிணைப்பாளர் பாக்கியராஜ், மாநில உயர்மட்டக்குழு உறுப்பினர் ஜெகநாதன் நிறைவுரையாற்றினர்.
இதையடுத்து, சாலை மறியலில் ஈடுபட்ட 60 பெண்கள் உட்பட 190 பேரை கடலுார் புதுநகர் போலீசார் கைது செய்தனர்.