ADDED : பிப் 16, 2025 03:15 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார் : கடலுார் பழைய கலெக்டர் அலுவலகம் முன் கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ - ஜியோசார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் பாலகிருஷ்ணன் தலைமை தாங்கினார்.
மாவட்ட தலைவர் வெங்கடாஜலபதி, அரசு உதவிபெறும் பள்ளி ஆசிரியர்கள் கூட்டமைப்பு, உயர்நிலை,மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகம், அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்கம், கருவூல கணக்குத்துறைசங்கம் உட்பட பல்வேறு சங்க நிர்வாகிகள் பங்கேற்றனர்.
ஆர்ப்பாட்டத்தில், அரசு ஊழியர்கள்,ஆசிரியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றாத தமிழக அரசைக் கண்டித்தும், பழைய ஓய்வூதிய திட்டதை செயல்படுத்த வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.