/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
புதுவண்டிப்பாளையத்தில் ஜெயம் ஸ்டோர் திறப்பு விழா
/
புதுவண்டிப்பாளையத்தில் ஜெயம் ஸ்டோர் திறப்பு விழா
ADDED : ஏப் 15, 2025 06:51 AM

கடலுார்; கடலுார் புதுவண்டிப்பாளையம் ஜெயம் ஸ்டோர் எலக்ட்ரிக்கல் மற்றும் ஹார்டுவேர்ஸ் கடை திறப்பு விழாவில் ஏராளமானோர் பங்கேற்றனர்.
கடலுார் புதுவண்டிப்பாளையம் சூரசம்ஹார தெருவில் ஜெயம் ஸ்டோர் எலக்ட்ரிக்கல் மற்றும் ஹார்டுவேர்ஸ் கடை திறப்பு விழா நடந்தது.
விழாவில் பாஸ்கர், அம்பலவாணன்பேட்டை முன்னாள் ஊராட்சி தலைவர் ராமச்சந்திரன் பங்கேற்று புதிய கடையை திறந்து வைத்தனர். மூத்த வழக்கறிஞர் சிவமணி, முதல் விற்பனையை துவக்கி வைத்தார்.
விழாவில் வர்த்தக சங்க நிர்வாகிகள், தொழிலதிபர்கள், நண்பர்கள், உறவினர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.
கடை உரிமையாளர் ஆனந்தன் வரவேற்றார். மேலும் அவர் கூறுகையில், எங்களிடம் பி.வி.சி., யு.பி.வி.சி., சி.பி.வி.சி., உட்பட பல்வேறு வகையான குழாய்கள், முன்னணி நிறுவன சுவிட்சுகள், வாட்டர் ஹீட்டர், இஸ்திரி பெட்டி, எல்.இ.டி.,பல்புகள், மின்விசிறிகள், பெயிண்ட் உள்ளிட்ட அனைத்து வகையான எலக்ட்ரிகல் மற்றும் ஹார்டுவேர் பொருட்கள் தரமாகவும், விலை குறைவாகவும் கிடைக்கும் என்றார்.