/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
காஞ்சி பெரியவர் கோவிலில் ஜெயந்தி விழா
/
காஞ்சி பெரியவர் கோவிலில் ஜெயந்தி விழா
ADDED : ஜூன் 11, 2025 07:17 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நெய்வேலி; நெய்வேலி மகா பெரியவர் கோவிலில் காஞ்சி காமகோடி பீடாதிபதி சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகளின் 132வது ஜெயந்தி விழா நடந்தது.
நெய்வேலி, ஆர்ச்கேட் அருகில் உள்ள அண்ணா கிராமத்தில் சப்த விநாயகர், மகா பெரியவர் கோவிலில் காஞ்சி காமகோடி பீடாதிபதி சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகளின் 132வது ஜெயந்தி விழாவையொட்டி நேற்று காலை 7:30 மணிக்கு ராஜ் சாஸ்திரிகள் தலைமையில் ஆவஹந்தி ஹோமம் மற்றும் சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடந்தது.
மாலை விஷ்ணு சகஸ்ரநாமம், லலிதா சகஸ்ரநாமம், பாராயணம் நடந்தது. ஏற்பாடுகளை ஆலயக் குழு செயலாளர் ராஜேஷ், பொருளாளர் சுரேஷ் தலைமையிலான குழுவினர் செய்திருந்தனர்.

