/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
ரோல் பால் ஸ்கேட்டிங் ஜெயப்பிரியா பள்ளி சாதனை
/
ரோல் பால் ஸ்கேட்டிங் ஜெயப்பிரியா பள்ளி சாதனை
ADDED : பிப் 25, 2024 05:24 AM

மந்தாரக்குப்பம், : மாநில அளவிலான ரோல் பால் ஸ்கேட்டிங் போட்டியில் விருத்தாசலம் ஜெயப்பிரியா வித்யாலாயா பள்ளி மாணவர்கள் வெற்றி பெற்றனர்.
தஞ்சாவூரில் மாநில அளவிலான ரோல் பால் ஸ்கேட்டிங் போட்டி நடந்தது. தமிழகத்தை சேர்ந்த 28 அணிகள் பங்கேற்றன. இதில், கடலுார் அணியில் பங்கேற்று விளையாடிய ஜெயப்பிரியா வித்யாலயா பள்ளி மாணவர்கள் தர்ஷன், ராம் பிரசாத், சாய் கவின், தமிழினியன், இறையரசு ஆகியோர் மாநில அளவில் இரண்டாம் இடம் பிடித்தனர்.
வெற்றி பெற்ற மாணவர்களை, ஜெயப்பிரியா வித்யாலயா கல்விக் குழுமங்களின் நிறுவனர் ஜெயசங்கர், பள்ளி இயக்குநர் தினேஷ், பள்ளி முதல்வர் ஸ்ரீ பாலா, தனித்திறன் பயிற்சிகளின் ஒருங்கிணைப்பாளர் சூர்யா கண்ணன், ரோல் பால் ஸ்கேட்டிங் பயிற்சி ஆசிரியர் கோவிந்தராஜ் பாராட்டினர்.