ADDED : பிப் 03, 2026 03:43 AM

அ நிறம் | அளவு
மந்தாரக்குப்பம்: தொழுதுார் ஜெயப்பிரியா வித்யாலயா கிரீன் பார்க் பள்ளியில் ஆண்டு விழா நடந்தது.
ஜெயப்பிரியா பள்ளி குழும நிர்வாக இயக்குநர் ஜெய்சங்கர் தலைமை தாங்கினார். பள்ளியின் கல்வி இயக்குநர் தினேஷ் முன்னிலை வகித்தார்.
பள்ளி முதல்வர்கள் கார்த்திகேயன், ஸ்ரீ பாலா ஆகியோர் ஆண்டறிக்கை வாசித்தனர்.
ஜெயப்பிரியா கல்வி குழுமங்களின் இயக்குநர் அனிதா ஜெய்சங்கர் குத்து விளக்கேற்றி துவக்கி வைத்தார். கலை நிகழ்ச்சிகள் நடந்தது. பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு வழங்கப்பட்டது.
விழாவில், ஜெயப்பிரியா கல்வி குழுமத்தின் அனைத்து பள்ளி முதல்வர்கள் பங்கேற்றனர்.
ஏற்பாடுகளை ஜெயப்பிரியா கல்விக் குழும முதன்மை நிர்வாக அலுவலர் ராமன்குமாரமங்கலம், நிர்வாக அலுவலர் உமா சங்கர் மற்றும் ஆசிரியர்கள் செய்திருந்தனர்.
