/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
ஜெயப்பிரியா பள்ளி மாணவர்கள் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு
/
ஜெயப்பிரியா பள்ளி மாணவர்கள் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு
ஜெயப்பிரியா பள்ளி மாணவர்கள் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு
ஜெயப்பிரியா பள்ளி மாணவர்கள் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு
ADDED : பிப் 08, 2025 12:18 AM

மந்தாரக்குப்பம் : நெய்வேலி வடக்குத்து ஜெயப்பிரியா பள்ளி மாணவர்கள் சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
நெய்வேலி வட்டாரப் போக்குவரத்து துறை மற்றும் போலீஸ் துறையுடன் இணைந்து, சாலை பாதுகாப்பு குறித்து, விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டாதீர்! என்ற விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
இதில், 500 க்கும் மேற்பட்ட மாணவர்கள் விழிப்புணர்வு வடிவமைப்பில் பங்கேற்றனர். ஜெயப்பிரியா கல்விக்குழும தலைவர் ஜெய்சங்கர், இயக்குநர் தினேஷ், போலீஸ் இன்ஸ்பெக்டர் சுதாகர், மோட்டார் வாகன ஆய்வாளர் பிரான்சிஸ், வடக்குத்து பள்ளி செயலாளர் சிந்து, முதல்வர்கள் பிந்து, சிதம்பரி, செயின்ட்பால் மெட்ரிக் பள்ளி முதல்வர் சைமன் ஆண்டனி ராஜ், எஸ்.ஆர்.கே. இன்டர்நேஷனல் பள்ளி முதல்வர் சுமதி, மகரிஷி வித்யா மந்திர் முதல்வர் வெங்கடேஸ்வரன், ஜவஹர் பள்ளி முதல்வர் ஜோன் மரியா உள்ளிட்டோர், மாணவர்களிடையே சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.