/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
தேசிய வில் வித்தை போட்டி ஜெயப்பிரியா பள்ளி தங்கம் குவிப்பு
/
தேசிய வில் வித்தை போட்டி ஜெயப்பிரியா பள்ளி தங்கம் குவிப்பு
தேசிய வில் வித்தை போட்டி ஜெயப்பிரியா பள்ளி தங்கம் குவிப்பு
தேசிய வில் வித்தை போட்டி ஜெயப்பிரியா பள்ளி தங்கம் குவிப்பு
ADDED : ஜூலை 24, 2025 03:42 AM

மந்தாரக்குப்பம்: தேசிய அளவிலான நடந்த வில் வித்தை போட்டியில் ஜெயப்பிரியா பள்ளி மாணவர்கள் தங்கம் மற்றும் வெள்ளி பதக்கம் பெற்று சாதனை படைத்தனர்.
ஈரோட்டில் டெக்ஸ்வேலி உள் விளையாட்டரங்கில் நடைபெற்ற தேசிய அளவிலான வில் வித்தைப் போட்டியில் நெய்வேலி வடக்குத்து மற்றும் விருத்தாசலம் ஜெயப் பிரியா வித்யாலயா சி.பி.எஸ்.இ., பள்ளி மாணவர்கள் பங்கேற்றனர்.
வெவ்வேறு மாநில ங்களில் இருந்து வந்த 250க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ மாணவிகள் போட்டியில் பங்கு பெற்றனர். இதில் ஜெயப்பிரியா பள்ளி மாணவர்கள் 15 பேர் தங்கப் பதக்கத்தையும், 23 பேர் வெள்ளி பதக்கத்தையும் வெ ன்று அசத்தியுள்ளனர்.
போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களை ஜெயப்பிரியா வித்யாலயா பள்ளி குழும தலைவர் ஜெய்சங்கர், இயக்குநர் தினேஷ், வடக்குத்து பள்ளி செயலாளர் சிந்து, முதல்வர்கள் பிந்து மற்றும் நித்யா, தனித் திறன் பயிற்சிகளின் ஒருங்கிணைப்பாளர் சூர்யா கண்ணன், பயிற்சியாளர் பிரவீன் உட்பட பலர் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.