/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
ஸ்கேட்டிங் போட்டியில் ஜெயப்பிரியா பள்ளி சாதனை
/
ஸ்கேட்டிங் போட்டியில் ஜெயப்பிரியா பள்ளி சாதனை
ADDED : செப் 25, 2025 03:40 AM

மந்தாரக்குப்பம் : மாவட்ட அளவிலான ஸ்கேட்டிங் போட்டியில் ஜெயப்பிரியா பள்ளி மாணவர்கள் தங்கம் மற்றும் வெள்ளி வென்று சாதனை படைத்துள்ளனர்.
கடலுாரில் நடந்த மாவட்ட அளவிலான ஸ்கேட்டிங் போட்டியில் ஏராளமான பள்ளி மாணவர்கள் பங்கேற்றனர்.இதில் நெய்வேலி, விருத்தாசலம் ஜெயப்பிரியா பள்ளி மாணவர்கள் பங்கேற்று தங்கம் மற்றும் வெள்ளி பதக்கங்களை பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்தனர். மாநில அளவினான போட்டியில் தேர்வு பெற்ற டோனி பிரிட்டோ, வருண், சர்வின்குமார், ஹர்சன், நிஷிகேத்,சாய்நிதன், சர்வேஷ்,ரோஷன், அஜய்கார்த்திக், ஹரிகிருஷ்ணன் உள்ளிட்ட மாணவர்களை ஜெயப்பிரியா பள்ளி குழும தலைவர் ஜெய்சங்கர், பள்ளி இயக்குநர் திணேஷ், பள்ளி செயலாளர் சிந்து, முதல்வர்கள் பிந்து. நித்யா, தனித்திறன்பயிற்சி ஒருங்கிணைப்பாளர் சூர்யா கண்ணன், ஸ்கேட்டிங் பயிற்சியாளர் கோவிந்தாராஜ், சிவா,ஆசிரியர்கள் உட்பட பலர் பாராட்டினர்.