தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ டெலிபோன் கேபிள் திருடிய ஜே.சி.பி., ஆபரேட்டர் கைது

 டெலிபோன் கேபிள் திருடிய ஜே.சி.பி., ஆபரேட்டர் கைது

 டெலிபோன் கேபிள் திருடிய ஜே.சி.பி., ஆபரேட்டர் கைது


ADDED : பிப் 23, 2026 03:13 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 23, 2026 03:13 AM


Follow on Google
அ நிறம் | அளவு

காட்டுமன்னார்கோயில்: காட்டுமன்னார்கோவில் ப குதியில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மூலம் கொள்ளிடம் கூட்டுக் குடிநீர் திட்டத்தில் குழாய் பதிக்கும் பணி கடந்த ஒரு மாதமாக நடக்கிறது.

மயிலாடுதுறை மாவட்டம் மணல்மேட்டை சேர்ந்த தம்பிதுரை மகன் ஆனந்தபாபு 34; குழி தோண்டும் ஜே.சி.பி., ஆபரேட்டராக உள்ளார்.

கொள்ளிடம் கூட்டுக் குடிநீர் திட்ட குழாய் பதிக்கும் பணி காரணமாக அந்தப் பகுதியில் பி.எஸ்.என்.எல்., இணைப்புகள் இயங்கவில்லை. அதனால் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு செய்தபோது, பூமியில் புதைக்கப்பட்டிருந்த ஒன்றரை கிலோமீட்டர் தூரத்திற்கு காப்பர் டெலிபோன் கேபிள் மற்றும் இரும்பு பைப்புகளை ஜே.சி.பி., ஆபரேட்டர் ஆனந்தபாபு திருடி சென்றது தெரிய வந்தது. இதன் மதிப்பு ரூபாய் ஒரு லட்சம்.

காட்டுமன்னார்கோயில் எஸ்.என்.எல்., உதவி பொறியாளர் கிருஷ்ணகுமார் கொடுத்த புகாரின் பேரில் காட்டுமன்னார்கோவில் போலீசார் வழக்கு பதிவு செய்து, ஜே.சி.பி., ஆபரேட்டடர் ஆனந்த்பாபுவை கைது செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us