/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
டிரான்ஸ்பார்மரில் ஜீப் மோதல்: தாசில்தார், டிரைவர் தப்பினர்; திட்டக்குடியில் பரபரப்பு

ADDED : டிச 05, 2024 11:40 PM

திட்டக்குடி : திட்டக்குடி தாசில்தார் ஜீப் டிரான்ஸ்பார்மரில் மோதி விபத்திற்குள்ளான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
கடலுார் மாவட்டம், திட்டக்குடி தாசில்தார் நேற்று காலை 11:30 மணிக்கு, ஆய்வு பணியை முடித்துவிட்டு, டி.என் 31-ஜி.0985 பதிவெண் கொண்ட பொலிரோ ஜீப்பில் அலுவலகத்திற்கு புறப்பட்டார். ஜீப்பை, டிரைவர் பாலமுருகன் ஓட்டினார்.
திட்டக்குடி அடுத்த கோழியூர் அருகே சென்றபோது, சாலையின் குறுக்கே வந்த பைக் மீது மோதாமல் இருக்க டிரைவர் பாலமுருகன் பிரேக் போட்டார். அதில், கட்டுப்பாட்டை இழந்த ஜீப், சாலையோரம் இருந்த டிரான்ஸ்பார்மரில் மோதி, கவிழ்ந்தது.
இந்த விபத்தில், தாசில்தார் அந்தோணிராஜ், டிரைவர் பாலமுருகன் லேசான காயங்களுடன் உயிர் தப்பினர். அவர்களை, அவ்வழியே சென்றவர்கள் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
டிரான்ஸ்பார்மரில் சிக்கிய ஜீப்பை, போலீசார், மின்வாரிய ஊழியர்கள் உதவியுடன் மீட்டனர்.
விபத்து குறித்து திட்டக்குடி போலீசார் விசாரித்து வருகின்றனர்.